சாத்தூர் அருகே இருக்கன்குடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (22), கல்லூரியில் படித்த தங்கப்பாண்டியம்மாளை ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தனிக்குடித்தனம் சென்றபோதும் கருத்து வேறுபாடு நீடித்ததால், ஹரிகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மனமுடைந்த அவர் இருக்கன்குடி அணைக்கட்டு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.