விருதுநகர்: கார் மூலம் புகையிலை பொருட்கள் கடத்தல்.. ஒருவர் கைது

1198பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்துப்பட்டி சந்திப்பு அருகே, உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான மாருதி காரை சோதனையிட்டபோது, அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, காரில் இருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார். மேலும், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி