தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்குகிறது. இப்பயிற்சியில் சேர 18 முதல் 32 வயதுடைய, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் உள்ள, 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 18,000 முதல் ரூ. 30,000 வரை கிடைக்கும். சென்னையில் தங்கிப் படிக்கும் வசதி, உணவுச் செலவை டாக்டர் ரெட்டி நிறுவனம் ஏற்கும். தகுதியுடையோர் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.