தெற்கு ரெயில்வே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06097) ஜனவரி 12 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06098) ஜனவரி 13 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 4.45 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.