ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜா மனைவி, கூமாப்பட்டி காவல் நிலைய தலைமைக் காவலர் நிர்மலா. இவருடைய மகன் ஜாக் (15), திங்கள்கிழமை சுந்தரபாண்டியம் விலக்கு அருகே காரில் வந்த 4 பேரால் கடத்தப்பட்டார். பின்னர், மிரட்டி செம்பட்டையான் கால் விலக்கு அருகே இறக்கி விடப்பட்டார். இதுகுறித்து நிர்மலா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கருத்தப்பாண்டி, பிரதீப் ஆகியோரை கைது செய்தனர். கருத்தப்பாண்டி பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.