விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரியகொல்லப்பட்டியில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கருப்பசாமி கோயிலில் நடைபெற்ற திருவிழாவில், திருவிழா செலவு மற்றும் நன்கொடை வசூல் கணக்குகள் தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் பதட்டமான சூழல் நிலவியது. இது குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பக்தர்கள் கைகளை உயர்த்தி வாக்களித்து தலைவரை தேர்வு செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்ட தலைவர்களின் பெயர்களுக்கு பக்தர்கள் ஆதரவு தெரிவித்து, அதிக ஆதரவு பெற்றவர் தலைமையில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.