விருதுநகர் நகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் தென் மண்டல ஆயத்த மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் துவக்க உரையாற்றினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.