விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த 11வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தெய்வானை படத்திறப்பு மற்றும் குடும்ப நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் வாசுகி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டு தெய்வானையின் படத்தை திறந்து வைத்து, அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.