சாத்தூர் அருகே திருமணத்திற்கு சென்ற இரண்டு பேர் ஆறு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், விவசாய நிலத்தில் அனுமதி இன்றி மின்சார வேலி அமைத்த வேப்பிலைபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சுதாகர் ஆகிய இருவரை அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது BNS 105, 238 பிரிவுகளிலும், மின்சாரச் சட்டத்தின் 135 பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் உத்தரவின் பேரில், இருவரும் வரும் 19 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.