அமைச்சருக்கு ஆதரவாக வைகோ வாக்கு சேகரிப்பு

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார். அவர், திருச்சுழி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வைகோ, திருச்சுழி மண்ணின் வரலாற்று பெருமைகளை நினைவு கூர்ந்தார். திருமேனி நாதர் மற்றும் கல்யாணி அம்மன் அருள்பாலிக்கும் இந்த தலத்தை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் பராமரித்ததாகவும், பராக்கிரம பாண்டியனால் காக்கப்பட்டதாகவும், ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட கோயில்களைக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி