விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி கிராம பஸ் ஸ்டாப்பில் தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.