
சிவகாசி: கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த விவசாயி..
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விவசாயி தங்கராஜ் (42) தனது தோட்டத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவரை பாம்பு கடித்துள்ளது. அதிர்ச்சியடைந்த தங்கராஜ், தன்னை கடித்த பாம்பை குளிர்பான பாட்டிலில் அடைத்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.























