சிவகாசி: சுகாதார சீர்கேடு, கழிவுநீர் இணைப்புக்கு எதிர்ப்பு

0பார்த்தது
சிவகாசி மாநகராட்சி 31வது வார்டுக்கு உட்பட்ட 66 வீட்டு காலனி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கழிவுநீர் வாருகால்கள் புதுப்பிக்கப்படாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி, தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள பகுதியில் இருந்து சுமார் 100 வீடுகளின் கழிவுநீரை இப்பகுதி வாருகாலுடன் இணைக்கும் பணி நடைபெறுவதால் பிரச்சனை மேலும் தீவிரமாகும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடிப்படை வசதிகளை சீரமைக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மீது குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பாதுகாப்புச் சுவர் இடிக்கப்பட்டதால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவும், மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், அரசு உடனடியாக கவனம் செலுத்தி சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி