விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரயில்வே மேம்பாலம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், டெல்லி வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்தது வருத்தமளிப்பதாகக் கூறினார். அப்பாவி மக்கள் உயிரிழப்பை ஏற்க முடியாது என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் சிறு பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக கேட்பது போல, டெல்லியில் நடந்த இந்த விபத்துக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார். இந்தச் சம்பவத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.