சிவகாசி அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

1702பார்த்தது
சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்த உறவினர்களான கவின் குமார்(11), தருண்(8) ஆகிய சிறுவர்கள் அருகிலுள்ள குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது இருவரும் நீரில் மூழ்கியது தெரியவந்தது. இதையடுத்து நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி