சிவகாசியில் விற்பனை 2 பேர் கைது;5பேருக்கு வலை வீச்சு.

0பார்த்தது
சிவகாசியில் விற்பனை 2 பேர் கைது;5பேருக்கு வலை வீச்சு.
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியில் வசிக்கும் போஸ் (33) என்பவர் வீட்டில் சிவகாசி கிழக்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், போஸ் ஆந்திராவில் இருந்து ரூ. 50 ஆயிரம் கொடுத்து 10 கிலோ கஞ்சாவை வாங்கி சிவகாசியில் நண்பர்களுடன் இணைந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் போஸ் மற்றும் நாகராஜன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி