சிவகாசியில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி பிரியா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கர், ராஜேசுவரன், முத்துப்பாண்டி, மணிசங்கர் ஆகியோர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர் பாலாஜியை மரக்கட்டையால் தாக்கியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவிக்கும் சங்கருக்கும் இருந்த கள்ளக்காதலை ரமேஷ் கண்டித்ததால் இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.