சிவகாசி: தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவன் பலி

1600பார்த்தது
சிவகாசி அருகே ஈஞ்சார் பகுதியில் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரத் (20) என்ற கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்த பேருந்து, பெட்ரோல் பங்கிலிருந்து சாலையை நோக்கி வந்த மாணவனின் இருசக்கர வாகனம் மீது மோதி, பின்னர் சரக்கு லாரி மீதும் மோதி நின்றது. போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பேருந்து ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி