அரசு மருத்துவமனையில் ரூ 32. 5 கோடியில் கட்டுமான பணி தீவிரம்..

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில், மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் திட்டத்தின் கீழ், ரூ. 32.5 கோடியில் நவீன தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நல மையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் 50 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நல மையம் அமைய உள்ளது. இந்தப் புதிய கட்டடம் 70,321 சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தால், மருத்துவமனையில் கூடுதலாக 139 படுக்கை வசதிகள் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் மேம்படுத்தப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி