விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அஇஅதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) இணைந்ததை அடுத்து, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜியை அவரது இல்லத்தில் அமமுகவின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், மேற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான சந்தோஷ்குமார் மற்றும் அமமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பு, கூட்டணியின் ஒரு பகுதியாக அமமுகவின் இணைப்பை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.