விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் வெற்றிபெற உதவும் "வெற்றி நமதே" என்ற கல்வி வழிகாட்டி கையேட்டை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி இலவசமாக வழங்கி வருகிறார். இதன் மூலம் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்றமடையச் செய்யவும், ஏழை மாணவர்களுக்கு உதவவும் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று சிவகாசி பள்ளப்பட்டி, நாரணாபுரம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது. மேலும், 15 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் புத்தகம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.