சிவகாசி அருகே, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த 28 வயது நர்சுக்கு, ரமேஷ்குமார் என்பவர் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று, அந்த பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி, அதிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். இந்நிலையில், ரமேஷ்குமார் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார், சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணுடன் தகராறு செய்து, கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது தொடர்பாக நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர்.