அமைச்சர் கீர்த்தனா, பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுத்தல் ஆகியவற்றுக்காகப் புதிய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்து ஆராய புதிய குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் துறை சார்ந்த வல்லுநர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் பட்டாசுத் தொழிலாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் இடம்பெற்று கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவுள்ளனர்.