சிவகாசி: திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

1703பார்த்தது
சிவகாசியில், அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் ₹2000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவிப்பதை விமர்சித்த ராஜேந்திரபாலாஜி, "தற்போது ஆட்சியில் உள்ள போதே வழங்க வேண்டியதுதானே, இனிமேல் ஆட்சிக்கு வந்து வழங்குவதாக சொல்வது கதை அளக்கும் வேலை" என்றார். திமுக எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் மக்கள் திமுகவிற்கு பட்டை நாமம் தான் கொடுப்பார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.