சிவகாசியில் நவ. 19 நாளை மின் தடை...

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நவம்பர் 19 அன்று வழக்கமான மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகாசி அர்பன், பாறைப்பட்டி, நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இந்தப் பணிகள் நடைபெறும். இதனால், சிவகாசி அர்பன், காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, நெல்லுகடை முக்கு, தலைமை தபால் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், பராசக்தி காலனி, வடக்குரத வீதி, வேலாயுத ரஸ்தா ரோடு, அண்ணா காலனி, நாரணாபுரம், பள்ளப்பட்டி, லிங்கபுரம்காலனி, ராஜூவ்காந்தி நகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜபுரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாசாநகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்கம் நகர், இந்திராநகர், முருகன் காலனி, எம். ஜி. ஆர் மற்றும் மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு, பாறைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், பஸ் நிலையம், ஜக்கம்மாள் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என மின்வாரிய அதிகாரி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.