சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை சாட்சியாபுரத்தில் 30 ஆண்டுகால கோரிக்கையான ரயில்வே மேம்பாலம், 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்துடன் நிறைவடைந்து, இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில், தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மேம்பாலத்தை திறந்து வைத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மேயர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2026 பிப்ரவரி 15க்குள் முடிக்க திட்டமிடப்பட்ட பணிகள், திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே நிறைவடைந்தது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.