ராஜபாளையம்: பைக் திருடன் அதிரடி கைது

248பார்த்தது
ராஜபாளையம்: பைக் திருடன் அதிரடி கைது
ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். முகவூர் பகுதியைச் சேர்ந்த வீரமணிகண்டன் தனது அண்ணனின் இரு சக்கர வாகனத்தில் கோயிலுக்குச் சென்றபோது அது திருடப்பட்டது. பழைய இரும்புக் கடை அருகே வாகனம் கண்டெடுக்கப்பட்டதோடு, அதை விற்க முயன்ற சுந்தர் (28) என்பவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி