ராஜபாளையம்: ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

1442பார்த்தது
ராஜபாளையம்: ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி திவ்யா (31), தனது 10 மாத குழந்தையுடன் கணவர் மற்றும் தந்தை உடன் திருச்சி செல்ல ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு செங்கோட்டையிலிருந்து பெங்களூரு செல்லும் கோடைகால சிறப்பு ரயிலில் ஏற முயன்றபோது, திவ்யா தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளார். ரயில் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி