விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் 7 வயது சிறுவனை தாக்கியதாக செல்வராஜ் (28) மற்றும் காளிபாபு (30) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த சிறுவன் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.