விருதுநகர்: வாலிபர்களை கத்தியால் வெட்டி பணம் பறித்த 3 பேர் கைது

70பார்த்தது
சிவகாசி அருகே வாலிபர்களை கத்தியால் வெட்டி பணம் பறித்த 3 பேர் கைது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வினித்தன் (வயது 29). இவர் தனது நண்பர் செல்வக்குமார் (24) என்பவருடன் திருத்தங்கல் கடம்பன்குளம் கண்மாய் அருகில் இருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அங்கு வந்த பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சித்திரைவேல் (37) மற்றும் தினேஷ்குமார் (20), துரைராஜ் (20) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணம் தர மறுத்த 2 பேரையும் அவர்கள் கத்தியால் வெட்டி உள்ளனர். இதில் காயம் அடைந்த 2 பேரிடம் இருந்து ரூ. 3,850 பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வினித்தன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து சித்திரைவேல், தினேஷ்குமார், துரைராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி