விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு காவல் நிலைய சரகத்தில், நேற்று (19.05.26) மாலை 04.00 மணியளவில், 38 வயது பெண் தனது வீட்டில் தோழிகளுடன் இருந்தபோது, 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 6 பேர் அத்துமீறி நுழைந்து, ஒருவரை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ. 60,000 மதிப்புள்ள தங்க தோடு, வெள்ளி கொழுசு மற்றும் இரண்டு கைபேசிகளைப் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 6 குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.