சிவகாசி: புதிய ரயில்வே மேம்பாலத்தின் பருந்து பார்வை காட்சி...

1பார்த்தது
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை சாட்சியாபுரத்தில் 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மத்திய அரசின் 10 கோடி மற்றும் மாநில அரசின் 61 கோடி ரூபாய் மதிப்பில், 71 கோடி ரூபாய் செலவில் 700 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலம், திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு பொருத்தும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பாலத்தின் பருந்துப் பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி