விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இளம்பெண்ணின் வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், கடந்த மாதம் 26 ஆம் தேதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்த அன்றே, இளம்பெண்ணின் தாய், மாமா மற்றும் ஒரு வக்கீல் ஆகியோர் வீட்டிற்கு வந்து இளம்பெண்ணை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இளம்பெண் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த இளைஞர், திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் இளம்பெண்ணைத் தேடி வருகின்றனர்.