சிவகாசி: அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் களப்பணிகள் குறித்து கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக மாணவரணி துணைச்செயலாளர் டாக்டர். V. M. விஜய்ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜியின் அறிவுறுத்தலின்படி தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.