சிவகாசி: பழக்கடை வியாபாரி மீது தாக்குதல்; CCTV காட்சி...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாமுல் கேட்டு மதுபோதையில் பழக்கடை வியாபாரி ராமரை தாக்கி 2000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமர் பணம் தர மறுத்ததால், 6 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தோஷ் (21), சாமுவேல் ராஜன் (20) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you