விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள கருநெல்லிநாத மீனாட்சி அம்பிகை திருக்கோவிலில் நேற்று (நவம்பர் 5) ஐயப்பசி மாத பௌர்ணமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், சுவாமி, அம்பாள் மற்றும் நந்திபகவானுக்கு 21 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அன்ன அலங்காரம், மலர் மற்றும் காய்கனி அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குழந்தை வரம் மற்றும் தொழில் வளம் பெருக பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான ஆண், பெண் பக்தர்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.