சிவகாசி: பட்டாசு ஆலைகளுக்கு வணிக வரித்துறையினர் நோட்டீஷ்...

10பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சுமார் 500 பட்டாசு ஆலைகள் முறையான ஜிஎஸ்டி வரி செலுத்தாதது தொடர்பாக வணிக வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டின் 90% பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் சிவகாசி பகுதியில், ஆண்டுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. சில ஆலை உரிமையாளர்கள் விற்பனைக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரி செலுத்தாத புகாரை அடுத்து, வேதிப்பொருட்கள் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிக்கும் புதிய நடைமுறையை அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். இதன் அடிப்படையில், பல லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி