சிவகாசி: தொடர் கஞ்சா விற்பனை;3 பேர் கைது....

2பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, டிஎஸ்பி அணில் குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சரஸ்வதிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அய்யனார் காலனியைச் சேர்ந்த செல்வக்குமார் (45), விஸ்வநத்தத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன் (26), மற்றும் சரஸ்வதிபாளையத்தைச் சேர்ந்த இருளப்பராஜா (24) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கஞ்சா விற்றதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.