விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணா சிலை முன்பாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. பல நாட்களாக குடிநீர் வெளியேறி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.