சிவகாசி: மூதாட்டி இறப்பு வழக்கு விவகாரம்;தோழி கைது..

5பார்த்தது
சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்த 84 வயது அரசு பள்ளி ஆசிரியை தாயாரம்மாள், அவரது தோழி ஜமுனாவால் நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார். பிப்ரவரி 11 அன்று தாயாரம்மாள் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் உயிரிழந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் செல்போன் மாயமானதால், இது கொலை என சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். சிவகாசி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஜமுனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you