விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் பட்டாசு காகித குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜெய முனீஸ்வரன் (17) என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.