சிவகாசி: அட்டை குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து...

1பார்த்தது
சிவகாசி: அட்டை குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில் சிவபெருமாள் என்பவருக்கு சொந்தமான அட்டைகுழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் அட்டைகுழாய்கள் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சிவகாசி டவுன் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.