சிவகாசி: குப்பையில் பற்றிய தீ காரிலும் பற்றி தீயால் பரபரப்பு

1பார்த்தது
சிவகாசி: குப்பையில் பற்றிய தீ காரிலும் பற்றி தீயால் பரபரப்பு
சிவகாசி சின்னத்தம்பி நகரில் அச்சக பணியாளர் செல்வக்குமார் என்பவரின் வீட்டருகே குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி, வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலும் பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குப்பையிலும் காரிலும் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி