விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு வியாபாரி செண்பகமூர்த்தி (56) தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக காணாமல் போன 91 பவுன் நகை குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வந்த நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மனம் உடைந்த அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.