சிவகாசி: கனமழை;மின் கம்பியை மிதித்து பட்டாசு தொழிலார் பலி....
சிவகாசி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவு இடி மின்னல் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்நிலையில் சிவகாசி அருகே ஆனையூர் காந்தி நகரில் வசித்த பட்டாசுத் தொழிலாளி மாரியப்பன் என்பவர் இரவில் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது தரையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நகர் போலீசார் விரைந்து சென்று மாரியப்பனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.