விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வடமலாபுரம் பகுதியில் திருத்தங்கல் சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள அண்ணாகாலனியை சேர்ந்த கணேசமூர்த்தி (50) என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பேப்பர் பாம் வகை பட்டாசுகளை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அந்த பேப்பர் பாம்களை போலீசார் பறிமுதல் செய்து கணேசமூர்த்தியை கைது செய்தனர். இதே போல் விஸ்வநத்தம் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு கடையின் பின்புறம் தகர செட் அமைத்து அதில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த முத் தமிழ்புரம் காலனியை சேர்ந்த கணேசமூர்த்தி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந் தமான பட்டாசு கடையில் தகர செட் அமைத்து அதில் பட்டாசு பதுக்கி வைத்திருந்த நாகராஜ் (44) அவரது மனைவி அழகுலட்சுமி (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.