சிவகாசி: பட்டாசு பதுக்கி வைத்திருந்தவர் கைது

1134பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதி நகர் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த விக்னேஷ் (32) என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய ரோந்து பணியில், அவரது வீட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த தகர செட்டில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்து சுமார் ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி