சிவகாசி: மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது....

1பார்த்தது
சிவகாசி: மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது....
சிவகாசி கோட்டத்தில் உள்ள மாரனேரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், காக்கிவாடான்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பெட்டிக்கடை அருகே அதிகளவில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் சந்தேகம் அடைந்தார். அங்கு சென்று பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (47) என்பவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, மதுபாட்டில்களையும் ரூ. 1,250 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி