விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஜெயராம் (66) என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 11 ஆயிரத்து 700 ஆகும். புகையிலை வைத்திருந்த முதியவர் ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.