சிவகாசி: காவல் நிலையம் மீது கல்வீசியவர் கைது...

0பார்த்தது
சிவகாசி: காவல் நிலையம் மீது கல்வீசியவர் கைது...
சிவகாசி தட்டாவூரணியை சேர்ந்த முருகன் மகன் அய்யனார் (21) என்பவர், மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் சுரேஷ்குமாருடன் தகராறு செய்துள்ளார். காவலர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அய்யனார், சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷன் மீது கற்களை வீசியுள்ளார். இதில் போலீஸ் ஸ்டேஷன் மேற்குப் பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்ததாகக் கூறப்படுகிறது. தலைமை காவலர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், அய்யனார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி